AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Australia vs South Africa: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், ஒரு நாள் தொடரானது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அயின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காகிசோ ரபாடா, ரியன் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் டேவிட் மில்லர், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேத்யூ பிரீட்ஸ்கி, கேசவ் மஹாராஜ் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளார். அதோபோல் இந்த ஒருநாள் அணியிலும் டெவால்ட் பிரீவிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ராம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாந்த்ரே பர்கர், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயென், ரஸ்ஸி வான் டெர் டுசென்
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், நந்த்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ராம், செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயென்
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க தொடர் அட்டவணை
- முதல் டி20 - ஆகஸ்ட் 10, டார்வின்
- இரண்டாவது டி20 - ஆகஸ்ட் 12, டார்வின்
- மூன்றாவது டி20 - ஆகஸ்ட் 16, கெய்ர்ன்ஸ்
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 19, கெய்ர்ன்ஸ்
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 22, மெக்கே
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 24, மெக்கே
Win Big, Make Your Cricket Tales Now