
Aus vs SL: McDermott named in T20I squad, Warner and Mitchell Marsh rested (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2021-22 பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் 13 போட்டிக்ளில் விளையாடி 29 சிக்ஸர்களுடன் 577 ரன்கள் எடுத்த ஹோபர்ட் அணியைச் சேர்ந்த 27 வயது பென் மெக்டர்மாட் தற்போது ஆஸ்திரேலிய டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இதற்கு முன்பு 2 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பென் மெக்டர்மாட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், ஜை ரிச்சர்ட்சன் போன்றோரும் இடம்பெற்றுள்ளார்கள். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.