
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹபார்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடினா. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் சேர்ந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் இங்கிலிஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 16 ரனளுடன் நடையைக் கட்ட, அதே ஓவரில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்கள் சேர்த்திருந்த டேவிட் வார்னரும் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.