
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது, டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன் படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான தங்களது பிளேயிங் லெவனை இரு அணிகளும் அறிவித்துள்ளன. இதில் கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
- நேரம் - காலை 5 மணி (இந்திய நேரப்படி)