
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று முந்தினம் பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தியதன் மூலம், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 511 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.
இதில் அதிகபட்சமாக மார்னஸ் லபுசாக்னே 163 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், டெவான் தாமஸ் தல 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.