
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட டிராவிஸ் ஹெட்டிற்கு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேமரூன் க்ரீனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கேமரூன் க்ரீன் கரோனா தொற்றிலிருந்து மீளாததால் அவர் சக வீரர்களுடன் நெருங்காமல் ஐசிசி நெறிமுறைகளை பின்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிரேத்வைட் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த சந்தர்பால் - மெக்கன்ஸி இணை ஓரளவு தாக்குபிடித்து விளையாடினர். பின்னர் மெக்கன்ஸி 21 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும், சந்தர்பால் 21 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.