ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரெலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிப்பதால் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இப்போட்டியி விளையாடவுள்ளது. அதேசமயம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - கபா கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்
- நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)