ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் நடைபெறவிள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - பெல்லரிவ் ஓவல் மைதானம், ஹாபர்ட்
- நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
பெல்லரிங் ஓவல் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பந்து குறைந்த வேகத்தில் வரும் என்பதால் பேட்டர்கள் தடுமாறுவார்கள். இதனால் பேட்டர்கள் நின்று சரியான பந்துகளை தேர்வு செய்து விளையாடுவது முக்கியம். இதனால் இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 19
- ஆஸ்திரேலியா - 09
- வெஸ்ட் இண்டீஸ் - 10
உத்தேச லெவன்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன், ஜோஷ் இங்கிலிஸ்
- பேட்டர்ஸ்: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ரோவ்மேன் பவல்
- ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல் (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர்
- பந்துவீச்சாளர்: சீன் அபோட், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோஸப்.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now