ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்த நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
- நேரம் - காலை 9 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
சிட்னி கிரிக்கெட் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பந்து மொதுவாகவும், நிலையற்ற பவுன்சையும் கொண்டுள்ளது. இது சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மிதவேக பந்துவீச்சாளர்களுக்கு பெரிதளவில் உதவும். இதனால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானம் பெரிதளவில் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 144
- ஆஸ்திரேலியா - 77
- வெஸ்ட் இண்டீஸ் -61
- முடிவில்லை - 06
உத்தேச லெவன்
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கே), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மார்னஸ் லாபுஷாக்னே, ஜேக் ஃபிரெசன் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஜோஷ் ஹசில்வுட், லான்ஸ் மோரிஸ், ஆடம் ஸாம்பா.
வெஸ்ட் இண்டீஸ்: அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), கேசி கார்டி, கெவெம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், மேத்யூ ஃபோர்டு, ஹெய்டன் வால்ஷ், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: ஷாய் ஹோப், ஜோஷ் இங்கிலிஸ்
- பேட்டர்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், கேசி கார்டி
- ஆல்ரவுண்டர்கள்: மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி (துணை கேப்டன்), ரொமாரியோ ஷெப்ஃபர்ட்
- பந்துவீச்சாளர்கள்: ஜோஷ் ஹசில்வுட், அல்ஸாரி ஜோசப்.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now