Advertisement

ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கான்பெர்ராவில் நடைபெறவுள்ளது.

Advertisement
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 05, 2024 • 02:47 PM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு ஒருநால் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரெலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளதால், நாளைய போட்டியிலும் வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 05, 2024 • 02:47 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - மனுகா ஓவல், கான்பெர்ரா
  • நேரம் - காலை 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

மனுகா ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 300 ரன்களை கடந்துள்ளது. இதனால் இங்கு பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிப்பார்கள் என நம்பலாம். அதேபோல் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேரலை 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 145
  • ஆஸ்திரேலியா - 78
  • வெஸ்ட் இண்டீஸ் -61
  • முடிவில்லை - 06

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கே), பென் மெக்டர்மோட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மார்னஸ் லாபுஷாக்னே, ஜேக் ஃபிரெசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஜோஷ் ஹசில்வுட், ஸேவியர், ஆடம் ஸாம்பா.

வெஸ்ட் இண்டீஸ்: அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), கேசி கார்டி, கெவெம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், மேத்யூ ஃபோர்டு, ஹெய்டன் வால்ஷ்,  அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஷாய் ஹோப்(கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், கேசி கார்டி, பென் மெக்டர்மோட்
  • ஆல்ரவுண்டர்கள்: ரோஸ்டன் சேஸ், கேமரூன் கிரீன், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: ஜோஷ் ஹசில்வுட்(துணைக்கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஸேவியர் பார்ட்லெட்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement