AUS vs ZIM, 3rd ODI: ஆஸியை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்த ஜிம்பாப்வே!
ஆஸ்திரேஎலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஒரு பக்கம் டேவிட் வார்னர் அபாரமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் டேவிட் வார்னர் விளையாடி அரைசதம் கடந்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 31 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரியான் பர்ல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கைடானோ 19 ரன்களில் ஆட்டமிழக்க, மதவெரே, வில்லியம்ஸ், ரஸா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மருமணி - ரேஜிஸ் சகாப்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 35 ரன்களோடு மருமணி விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த சகாப்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 39 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now