
Aus W v Ind W, 2nd T20I: McGrath holds nerve as hosts clinch multi-format series with 4-wkt win (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி பூஜா வஸ்த்ரகரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வஸ்த்ரகர் 37 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. அலிசா ஹீலி, மெக் லெனிங், கார்ட்னர், எல்லீஸ் பெர்ரி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.