Advertisement

AUSW vs INDW: தொடர் மழையால் பாதியிலேயே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement
Aus W v Ind W, D/N Test: Smriti Mandhana puts India off to flying start before rain plays spoilsport
Aus W v Ind W, D/N Test: Smriti Mandhana puts India off to flying start before rain plays spoilsport (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 30, 2021 • 07:34 PM

ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் இன்று தொடங்கியது. இரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 30, 2021 • 07:34 PM

மேலும், 15 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெறுவதாலும், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

Trending

அதன்படி இன்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்த இணை 93 ரன்களைச் சேர்த்தது. பின் 31 ரன்களில் ஷஃபாலி வார்மா விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். 

இதையடுத்து முதல்நாள் உணவு இடைவேளைக்கு பின் நடைபெற இருந்த செஷன் ஆட்டம் மழைக்காரணமாக தடைபட்டது. அதன்பின் தொடங்கிய போட்டியும் விட்டு விட்டு மழைப்பெய்த காரணத்தால் விளையாடமுடியாமல் போனது. 

இதன் காரணமாக முன்கூட்டிய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்திய அணி தரப்பில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ராவது 16 ரன்களுடனும்,இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement