
Aus W vs Ind W, pink-ball Test: Mandhana's maiden ton puts visitors on driving seat (Dinner, Day 2) (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று குயிண்ட்ஸ்லேண்டில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது. இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து ஸ்மிருதி மந்தனா 80 ரன்காளுடனும், பூனம் ராவத் 16 ரன்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.