
Australia Women vs New Zealand Women 3rd T20I Dream11 Prediction: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS W vs NZ W 3rd T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலிய மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
- இடம் - ஆலன் பார்டர் ஃபீல்ட், பிரிஸ்பேன்
- நேரம் - செப்டம்பர் 24, மதியம் 2.40 மணி (இந்திய நேரப்படி)