
Aussie Women's Squad Announced For Series Against India (Image Source: Google)
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்து தொடரில் விளையாடிய இந்திய அணியே இத்தொடரிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக் லேனிங் தலைமையிலான இந்த அணியில் ஸ்டெல்லா காம்ப்பெல்,ஜார்ஜியா ரெட்மெய்ன் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.