Advertisement

பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்!
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 14, 2024 • 09:48 AM

ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடர ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 14, 2024 • 09:48 AM

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கேமரூன் கிரீன் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

Trending

மேற்கொண்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் கேமரூன் க்ரீன், இந்தாண்டு இறுதியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதும் சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேமரூன் கிரீன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக கேமரூன் கிரீன் பல மாதங்கல் ஓய்வில் இருக்க வேண்டியா நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் இந்தியாவுக்கு எதிரான பர்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாட மாட்டார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று உறுதிசெய்துள்ளது. மேலும் கேமரூன் கிரீனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபடவுள்ளதையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

 இதுகுறித்து வெளியான அறிக்கையில், “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதுகெலும்பு அழுத்த முறிவுகள் அசாதாரணமானது அல்ல என்றாலும், காயத்திற்கு பங்களிப்பதாக நம்பப்படும் எலும்பு முறிவுக்கு அருகிலுள்ள பகுதியில் கேமரூன் கிரீனுக்கு ஒரு தனித்துவமான குறைபாடு உள்ளது. முழுமையான ஆலோசனைக்குப் பிறகு, கேமரூன் கிரீனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

கேமரூன் கிரீன் இத்தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் மிட்செல் மார்ஷ் பந்துவீச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் தனது தொடக்க வீரர் இடத்தை விட்டு, நான்காம் இடத்தில் களமிறங்கக்கூடும்.  ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமான கேமரூன் கிரீன் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 6 அரைசதங்களுடன், 1,377 ரன்களையும், பந்துவீச்சில் 35 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement