Advertisement

AUS vs PAK, 3rd Test: பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான் & ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
AUS vs PAK, 3rd Test: பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான் & ஆஸ்திரேலியா!
AUS vs PAK, 3rd Test: பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான் & ஆஸ்திரேலியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 02, 2024 • 01:54 PM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 02, 2024 • 01:54 PM

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளது.

Trending

அதேவேளையில் நாளை தொடங்கும் ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணி உள்ளது. அதுவும் இது வார்னரின் கடைசி டெஸ்ட் என்பதால் அவரை வெற்றியோடு வழியனுப்பி வைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

இந்நிலையில், இப்போட்டிக்கான இரு அணிகளுக்குமான பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஷாஹின் அஃப்ரிடி அணியிலிருந்து நீக்கப்பட்டு மிர் ஹம்சாவும், இமாம் உல் ஹக்கிற்கு பதிலாக சயீம் அயூப்பும் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரெலியா: பாட் கம்மின்ஸ் (கே) டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹசில்வுட்.

பாகிஸ்தான்: சயீம் அயூப், அப்துல்லா ஷஃபிக், ஷான் மசூத், பாபர் ஆசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, சஜித் கான், ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement