
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது, டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன் படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான தங்களது பிளேயிங் லெவனை இரு அணிகளும் அறிவித்துள்ளன. இதில் கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமார் ஜோசப் ஆகிய அறிமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து கீமார் ரோச், சந்தர்பால், அல்ஸாரி ஜோசப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.