
டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.
பாக்ஸிங் டே என்பது ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.