
இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாலும், பல சிறப்புமிக்க தருணங்களையும் நினைவுகளையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய உலகக்கோப்பை தொடர் என்பதாலும், அதிகபட்ச சவால்கள் இருக்கும் உலகக் கோப்பை தொடர் என்பதாலும், ரசிகர்கள் தாண்டி கிரிக்கெட் வீரர்கள் வரை எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை தொடராக இருக்கிறது.
நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசியுள்ள ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹக் கூறுகையில் “ஆஸ்திரேலியா ஸ்டார்க் உடன் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதலை கொண்டு உள்ளார்கள். அவர் புதிய பந்தில் சிறிது சேதாரங்களை எதிரணிகளுக்கு ஏற்படுத்தலாம். எங்களிடம் சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஜாம்பா இருக்கிறார். அவர் மிடில் ஓவர்களை கட்டுப்படுத்துவார். இப்படி சிறப்பான விஷயங்கள் ஆஸ்திரேலியாவிடம் இருக்கிறது.