
WI vs AUS, 1st T20I: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுக வீரர் மிட்செல் ஓவன் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் அரைசதம் கடந்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிக்களுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்ரு ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்து ரோஸ்டன் செஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ஷும்ரான் ஹெட்மையர் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, மற்ற நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பவெல், ஆண்ட்ரெ ரஸல், ஷெர்ஃபேன் ரூதார்ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.