WI vs AUS: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் எவின் லூயிசைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால், 45.1 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயீஸ் 55 ரன்களைச் சேர்த்தார்.
Trending
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், மேத்யூ வேடின் அரைசதத்தால் 30 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்த தொடர் முழுவதும் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now