
WI vs AUS, 4th T20I: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் அரைசாதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய பிராண்டன் கிங் 18 ரன்களுக்கும், கேப்டன் ஷாய் ஹோப் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸூம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் - ரோவ்மன் பாவெல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களுக்கும், ரொவ்மன் பாவெல் 28 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.