Advertisement

டி20 உலகக்கோப்பை - இறுதி போட்டிக்கு இந்த அணிகள் தான் முன்னேறும்: ரிக்கி பாண்டிங்!

டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

Advertisement
 Australia great Ricky Ponting makes brave prediction about T20 World Cup final
Australia great Ricky Ponting makes brave prediction about T20 World Cup final (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 04, 2022 • 09:53 AM

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர்16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 லீக் போட்டிகள் அரும் அக்டோபர் 6ம் தேதியன்று முடிவுக்கு வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 04, 2022 • 09:53 AM

பெரும்பாலான லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்ட போதும் ஒரு அணிக்கூட இதுவரை அரையிறுதி சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யவில்லை. இதே போல் ஒரு அணி கூட தோல்வியே பெறாத அணி என்ற பெருமையுடனும் இல்லை.

Trending

குரூப் ஏ-ஐ பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் தலா 5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்றொரு புறம் குரூப் பி பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.

இந்த தொடரில் அசுர பலத்தை வெளிப்படுத்தி வருவது தென் ஆப்பிரிக்க அணி தான். எந்தவொரு அணியாலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த தென் ஆப்பிரிக்கா, நேற்று பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. எனினும் போராடி தோற்றது. அந்த அணி வேகப்பந்துவீச்சு, பேட்டிங் என கலக்கி வருவதால், இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால் நிச்சயம் வெற்றி என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு ரிக்கிப் பாண்டிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்க அணி யாராலும் வீழ்த்த முடியாமல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. இறுதிப்போட்டியில் யார் மோதப்போகிறார்கள் என்பதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. ஆனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் என நான் நினைக்கிறேன்.

புள்ளிப்பட்டியலில் 3ஆவதாக உள்ள ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற வேண்டுமென்றால் அடுத்தாக உள்ள ஆஃப்கானிஸ்தான் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் ரன்ரேட்டில் அதிகம் உள்ள இங்கிலாந்தும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement