உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை தவறவிடும் ஆஸி.!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை இல்லாததால் இப்போட்டி ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு 4000 ரசிகர்களை அனுமதிக்கவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதேசமயம் இப்போட்டியை தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பும் உரிமைகளும் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் இப்போட்டியை ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப இதுநாள் வரை எந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் உரிமம் வழங்கப்படாததால், ஆஸ்திரேலிய ரசிகர்களால் இப்போட்டியை தொலைக்காட்சி வாயிலாக காணமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்களிடம் ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. இதுவரை இப்போட்டியை ஒளிபரப்பும் உரிமம் யாரிடமும் தரப்படவில்லை. இதனால் கூடிய விரைவில் இதற்கான மாற்று வழியை ஐசிசி மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now