
Australia name squads for Sri Lanka tour (Image Source: Google)
ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இலங்கைக்கு செல்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
16 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் ஸ்டெகெட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர், ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணியில் ஆடுவார்கள்.