Advertisement
Advertisement
Advertisement

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 09, 2024 • 12:33 PM
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியதுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (பிப்ரவரி 09) முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending


பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் லான்ஸ் மோரிஸ் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மைக்கேல் நேசர் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணைக்கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். 

அதேசமயம் நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட், கேமரூ க்ரீன், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன், உஸ்மான் கவாஜா ஆகியோருடன் மேத்யூ ரென்ஷாவுக்கு மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement