
Australia Strengthen Hold Over The Top Of ICC Test Rankings (Image Source: Google)
ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2ஆவது இடத்தில் உள்ள இந்தியாவை விடவும் ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தில் உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் பாகிஸ்தானை 1-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது.
இதனால் டெஸ்ட் தரவரிசையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.