
Australia to play five T20Is against Bangladesh in August: Report (Image Source: Google)
இந்தியாவில் இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருகிறது.
இருப்பினும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியை தயார் செய்து வருகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்து 17 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணியும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.