ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளூம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Trending
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
- இடம் - மனுகா ஓவல், கான்பெர்ரா
- நேர்ம் - மதியம் 1.40 மணி
போட்டி முன்னோட்டம்
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் டி20 போட்டியில் கடைசி வரை போராடியும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டியதே அணியின் தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால் இனிவரும் போட்டிகளில் அந்த அணி பேட்டிங்கில் கூடுதல் கவனம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாதது அணிக்கும் பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது. ஆயினும், நாதன் எல்லீஸின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தியது. அதிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது கூட்டணி அந்த அணிக்கும் பெரும் தலைவலியாக இருந்தது.
ஆனாலும் பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி ஆகியோரும் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் இந்த போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
அணியின் பந்துவீச்சில் மார்க் வுட், ஆதில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ரீஸ் டாப்லி, மொயின் அலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 21
- இங்கிலாந்து - 10
- ஆஸ்திரேலியா - 10
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜோஸ் பட்லர் (கே),அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், ஹாரி ப்ரூக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ரீஸ் டாப்லி, அடில் ரஷித், மார்க் வூட்.
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கே), மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், டேனியல் சாம்ஸ், நாதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்வெப்சன்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜாஸ் பட்லர், மேத்யூ வேட்
- பேட்டர்ஸ் - ஹாரி ப்ரூக்ஸ், டேவிட் வார்னர், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட்
- ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி, மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- பந்துவீச்சாளர்கள் - ரீஸ் டாப்லி, மார்க் வுட், நாதன் எல்லிஸ்
Win Big, Make Your Cricket Tales Now