
Australia vs India 2nd ODI Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சி செய்யும். அதேசமயம் ஷுப்மன் கில் தலைமையில் முதல் முறையாக ஒருநாள் தொடரை எதிர்கொண்டுள்ள இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs IND 2nd ODI: போட்டி தகவல்கள்