AUS vs IND, 3rd T20I, Cricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இந்திய அணி தோல்விக்கு பிறகு இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AUS vs IND: Match Details
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
- இடம் - பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானம், ஹோபர்ட்
- நேரம் - மதியம் 1.45 மணி
AUS vs IND: Live Streaming Details
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
AUS vs IND: Head-to-Head in T20Is
- Total Matches: 34
- Australia: 10
- India: 20
- No Result: 02