ஆஸ்திரேலியா vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Australia vs India 4th T20I Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா 1-1 என தொடரை சமன் செய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AUS vs IND 4th T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
- இடம் - கராரா ஓவல் கிரிக்கெட் மைதானம், குயின்ஸ்லாந்து
- நேரம் - மதியம் 1.45 மணி