
IN-W vs AU-W, 1st ODI: இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சண்டிகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இதிய அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரதிகா ராவலும் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.