
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத (Image Source: Cricketnmore)
AUS-W vs SL-W, Match 5, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS-W vs SL-W: Match Details