
Australia Women's Skipper Meg Lanning Announces Indefinite Break From Cricket (Image Source: Google)
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லெனிங். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 6 டெஸ்ட், 100 ஒருநாள், 124 டி20 போட்டிகளில் விளையாடி 8 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 17 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில் மெக் லெனிங் தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகி கூறுகையில், “ மெக் லெனிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நம்பமுடியாத பங்களிப்பாளராக இருந்தார். தனித்தனியாகவும் அணியின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை சாதித்து வந்தார். மேலும் இளம் வீராங்கனைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அவர் இருந்து வருகிறார்.