
கிராண்ட்ஸ்லாம் கிரிக்கெட் தொடர்களில் முக்கிய போட்டியாக கருதப்படும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 14ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் பார்க்கில் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் 10 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற செர்பியாவின்நோவக் ஜோகோவிச் இடம் பெற்று விளையாட இருக்கிறார்.
Game respects game!
— #AusOpen (@AustralianOpen) January 11, 2024
(And Novak is just like the rest of us when it comes to Smudge...)@stevesmith49 • @DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/ioL8hjVSrF
தற்போது இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடினர். இதில், ஜோகோவிச் பந்தை சர்வீஸ் செய்ய, பேட்டிங்கில் தடுப்பது போன்று ஸ்மித் கச்சிதமாக பந்தை திருப்பி அனுப்பினார். இதைக் கண்ட ஜோகோவிச் டென்னிஸ் பேட்டை கீழே போட்டுவிட்டு தனது இரு கைகளையும் தூக்கி தலை குணைந்து ஸ்மித்திற்கு மரியாதை செய்தார்.