
Australia's Labuschagne Overtakes Root To Take Top Spot In ICC Test Rankings For Batters (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் இரட்டை சதம் மற்றும் சதமடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே 935 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.