ஐசிசி சிறந்த டி20 வீராங்கான: தாஹிலா மெக்ராத் தேர்வு!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை தஹிலா மெக்ராத் 2022க்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட்டின் சிறந்த மகளிர் வீராங்கனையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தானின் நிதா தார், நியூசிலாந்து கேப்டன் சோபி டிவைன் ஆகியோர் போட்டியிட்டனர்.
Trending
இதில் ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத் மற்ற மூவரையும் வீழ்த்தி 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை கைப்பற்றினார். இவர் 2021ஆம் ஆண்டு தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது இவர் தான் மகளிர் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அசோசியேட் நாடுகளில் சிறந்த வீரராக நமீபியாவின் ஹெகார்ட் எராஸ்மஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அசோசியேட் நாடுகளில் சிறந்த வீராங்கனையாக ஐக்கிய அரபு அமீகரகத்தின் ஈஷா ஓசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now