உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; லபுஷாக்னேவுக்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோபை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்கும் நாளாக இன்று செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் தனது இறுதி அணியை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்தியத் தேர்வாளர்கள் உடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணி நிர்வாகம் இறுதிவரை உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்திருக்கும் அணியே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி போலவே ஆஸ்திரேலியா அணியும் தமது 15 பேர் கொண்ட இறுதி உலகக்கோப்பை அணியை அருவிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி எது என்பது குறித்து எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.
Trending
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிர்ஷ்ட வீரர் மார்னஸ் லபுஷாக்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே சமயத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கின்ற காரணத்தினால் கூடுதல் சுழற் பந்துவீச்சாளருக்கு இடம் கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா அணியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடம் ஜாம்பா மட்டுமே சுழற் பந்து வீச்சாளராக அணியில் நீடிக்கிறார். சங்கா மற்றும் ஆஸ்டன் அகர் இருவருக்கும் இடம் தரப்படவில்லை.
ஆஸ்திரேலிய அணி: பாட் கமின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜாஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now