Advertisement
Advertisement
Advertisement

AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பங்கேற்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 22, 2024 • 12:45 PM
AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில்  அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியின்போது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர் ஷமார் ஜோசவ் பந்துவீச்சில் தலையில் அடிபட்டது.  அப்போது அவருக்கு ரத்தகசிவு ஏற்படவே, உடனடியாக மைதானத்திலிருந்து கவாஜா வெளியேறி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Trending


அதன்பின் நேற்றைய தினம் பயிற்சிக்கு திரும்பிய கவாஜாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் முடிவுகள் அவருக்கு சாதகமாக இருந்தன. இருப்பினும் அவருக்கு தாமதமாக ஏதெனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்காக இன்றைய தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிசோதனை முடிவில் உஸ்மான் கவாஜாவிற்கு சாதகமான முடிவுகள் கிடைத்தன. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரிஸ்பேனில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் கவாஜா பங்கேற்பார். இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் அவர் நாளை முதல் தனது வழக்கமான பயிற்சிகளை தொடங்குவார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்.

 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement