
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மட்டும் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் சிலர் தொடரில் பங்கேற்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ் காயம் காரணமாக முதல் பாதி ஐபிஎல் தொடரையும், ஆவேஷ் கான் சில போட்டிகளையும், மொஹ்சின் கான் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியும் உள்ளனர். இதில் மொஹ்சின் கானுக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூரை அந்த அணி மற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனாலும் அந்த அணியின் பந்துவீச்சு பெரிதளவில் கைக்கொடுக்காததன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணி கடைசி வரை போராடியும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் எதிர்வரும் போட்டிகளில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அந்த அணிக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.