
Avesh Khan On His Way To Recovery As He Eyes Return To Cricket In IPL 2021 (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் கூடுதல் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஆவேஷ் கான், பயிற்சியின் போது காயமடைந்தார். இதையடுத்து அவர் நாடு திரும்பி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆவேஷ் கான் குணமடைந்து தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.