பயிற்சி ஆட்டம்: மருத்துவ கண்காணிப்பில் ஆவேஷ் கான்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் காயமடைந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. டர்ஹாமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கவுண்டி லெவன் அணிக்காக விளையாடுகின்றனர்.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானிற்கு இடதுகை கட்டை விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் இருப்பார். பயிற்சி ஆட்டத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார்” என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் அஜின்கியா ரஹானே ஆகியோர் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now