
Axar Patel Ready To Join Team In 3-4 Days, Says Delhi Capitals (Image Source: Google)
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையடிய இவர் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்காகத் தயாராகி வந்த அக்சர், கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் அவர் இடம்பெறமாட்டார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் அவருக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் அக்சர் அணியில் இணைவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.