Advertisement

பாகிஸ்தான் டி20 அணியில் அறிமுகமாகும் முன்னாள் கேப்டன் மகன்!

பாகிஸ்தான் டி 20 அணியில் முன்னாள் கேப்டன் மொயின் கானின் மகன் அசாம் கான் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 05, 2021 • 21:01 PM
Azam Khan, Pakistan's Biggest Loser, Sheds 30 Kilos To Earn Maiden T20I Call-Up
Azam Khan, Pakistan's Biggest Loser, Sheds 30 Kilos To Earn Maiden T20I Call-Up (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஏழு டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இவ்விரு தொடர்களிலும் 20 ஓவர் அணியில் புதுமுக வீரராக 22 வயதான அசாம் கான் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான மொயின் கானின் மகன் ஆவார். அசாம் கான் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் டி20 லீக் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பாக அவரது சிக்சர் அடிக்கும் திறன் தான் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Trending


ஓராண்டுக்கு முன்பே அவரை அணிக்கு தேர்வு செய்வது குறித்து தேர்வு குழு யோசித்தது. ஆனால் அப்போது அவரது உடல் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாக இருந்தது. ஓரளவு மெலிந்தால் தான் அணித்தேர்வில் பரிசீலிக்க முடியும் என்று தேர்வு குழுவினர் கூறியதைத் தொடர்ந்து, உடற்பயிற்சியின் மூலம் அவர் 30 கிலோ எடையை குறைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பாகிஸ்தான் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement