
Baba Aparajith named in 14-member India A team for SA tour (Image Source: Google)
இந்திய ஏ அணி வரும் 23ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தொடருககான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் 4 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தியா ஏ அணியில் இணைந்துள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் பாபா அபரஜித் விளையாடினார்.27 வயது பாபா - 78 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்துதால் இந்திய ஏ அணிக்கு பாபா தேர்வாகியுள்ளார்.