இந்திய அணி போட்டியும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று தான் - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான். இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த முறை டபுள் விருந்து கிடைத்துள்ளது. அதாவது வரும் ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இது ஒரு தனிப்பட்ட தொடர் போன்று ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
Trending
இந்நிலையில் இந்திய அணியை இதில் எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார். அதில், “மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியை போலவே இந்திய அணி போட்டியும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று தான். வழக்கம் போல தயாராவோம், சாதாரணம் எனக்கருதி தான் விளையடுவோம்.
முக்கிய தொடர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் விளையாடுவது மட்டும் எங்களுக்கு சற்று நெருக்கடிகள் ஏற்படுகின்றன. நாங்கள் எங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். முயற்சி செய்ய தான் முடியும், முடிவுகள் தானாக தேடி வரும்” என பாபர் அசாம் கூறியுள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது, இந்திய அணியை உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடித்தது. அதுவும் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. எனவே இந்த முறை அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now