Advertisement

கோலி, வில்லியம்சன்லாம் கிடையாது; இவர் தான் சிறந்தவர் - டேனியல் வெட்டோரி!

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் தான் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 09, 2022 • 19:32 PM
‘Babar Azam is the most in-form batter right now’: Daniel Vettori
‘Babar Azam is the most in-form batter right now’: Daniel Vettori (Image Source: Google)
Advertisement

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோருடன் பாகிஸ்தானின் பாபர் அசாம் இணைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடி, சதங்களை விளாசி, பேட்டிங்கில் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.

விராட் கோலி இரண்டரை ஆண்டுகளாக ஃபார்மில் இல்லை. கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தும் பெரிய ஃபார்மில் இல்லை. ஜோ ரூட் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. எனவே இப்போதைக்கு பாபர் அசாம் தான் அனைத்துவிதமான போட்டிகளிலும் அருமையாக பேட்டிங் ஆடிவருகிறார்.

Trending


கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் ஆடிய 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 276 ரன்கள் ரன்களை குவித்தார் பாபர் அசாம். இந்நிலையில், பாபர் அசாம் தான் இப்போதைக்கு சிறந்த பேட்ஸ்மேன் என்று டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, “வெவ்வேறு ஃபார்மட்டுகளில் கிரிக்கெட் ஆடப்படுவதால் ஒட்டுமொத்தமாக யார் சிறந்தவர் என்று கூறுவது கடினம். ஆனால் இப்போதைக்கு பாபர் அசாம் தான் செம ஃபார்மில் உள்ள சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement